சற்றுமுன்

“அழகு க்ரீம் விளம்பரத்தில் நடித்தது வருத்தமளிக்கிறது” – ஸ்ரேயா


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், சிம்பு ஜோடியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. இந்நிலையில், அழகு க்ரீம் விளம்பரத்தில் நடித்தது வருத்தமளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார் ஸ்ரேயா. “நம் நாட்டில் அழகு பற்றிய முட்டாள் விஷயங்கள், கற்பிதங்கள் நிறைய உள்ளன. அழகாக இல்லையென்றால் திருமணம் நடக்காது, குறிப்பிட்ட க்ரீமைப் பயன்படுத்தி அழகானதும் திருமணம் நடக்கும் போன்ற முட்டாள்தனமான விளம்பரங்களைப் பார்த்து மக்கள் கெட்டுப் போயுள்ளனர். நானும் அந்த மாதிரியான விளம்பரங்களில் நடித்துள்ளேன். நான் நடித்த ஃபேர் அண்ட் லவ்லி மற்றும் கோகோ கோலா விளம்பரங்களுக்காக இப்போது வருத்தப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார் ஸ்ரேயா.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.