சற்றுமுன்

ட்விட்டர் சர்ச்சை… முதன்முறையாக வாய்திறந்த சுசித்ரா

                     

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பல பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்த சுசித்ராவை யாரும் மறந்திருக்க முடியாது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ‘சுச்சி லீக்ஸ்’ தான் பயங்கர வைரல். பிறகு, எங்கு சென்றார் எனத் தெரியாத சுசித்ரா, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், தன் கணவர் குறிப்பிட்டபடி தனக்கு உண்மையிலேயே மனநிலை சரியில்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிவித்த அவர், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவதாகத் தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் கணக்கு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் ஹேக் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ள அவர், இதனால் பிரபலங்கள் பலருக்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதற்காக தான் வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.