சற்றுமுன்

கோடையில் தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

தக்காளியில்தான் நிறைய லைகோபேன் இருப்பதால் அதனை இருதயம், எலும்பு இவற்றின் ஆரோக்கியத்தினருக்கு அவசியமானதாக விஞ்ஞானம் பரிந்துரைக்கின்றது. ஆனால் ஆய்வில் தர்பூசணி பழத்திலும் தக்காளியை விட அதிக லைகோபேன் சத்து இருப்பதால் இப்பழம் மிக அதிகமாக சிபாரிசு செய்யப்படுகின்றது.
நன்கு சிவந்த பழத்தில் இச்சத்து அதிகம் கிடைக்கின்றது.
* நோய் எதிர்ப்பு சக்தியினை பெற முடியும்.
* தர்பூசணி பழம் ரத்தக் கொதிப்பினை தடுக்கும் சக்தி கொண்டது.
* தசைகளின் சோர்வினை நீக்க வல்லது.
* நிறைந்த கால்சியம் சத்து கொண்டது.
* நிறைந்த நீர் சத்து அளிக்க வல்லது.
* புற்று நோய் தவிர்ப்பிலும், சிகிச்சை பொழுதும் தர்பூசணி உதவுகின்றது.
* கெட்ட கொழுப்பினை நீக்க தர்பூசணி உதவுவதால் இருதய பாதிப்புகள் வெகுவாய் தடுக்கப்படுகின்றன.
* கண் பார்வை பாதிப்பு தவிர்க்கப்படுகின்றன.
* சிறந்த வைட்டமின் ‘சி’ சத்தினால் ஆஸ்துமா வெகுவாய் தவிர்க்கப்படுகின்றது.
* செரிமான சக்தி ஊக்குவிக்கப்படுகின்றது.
* எடை குறைப்பிற்கு உதவுகின்றது.
* சதை, நரம்புகள் பாதுகாக்கப்படுகின்றது.
* நெஞ்செரிச்சல் நீங்குகின்றது.
* காயங்கள், புண்கள் சீக்கிரம் ஆறுகின்றன.
* வெயிலில் ஏற்படும் ‘heart stroke’ தவிர்க்கப்படுகின்றது.
* ஈறுகள் பாதுகாக்கப்படுகின்றன.
* ‘ஸ்கர்வி’ எனப்படும் சரும பாதிப்பு தவிர்க்கப்படுகின்றது.
* ரத்தக் கொதிப்பினை கட்டுப்படுத்த வல்லது.
வெயிலில் இருந்து பாதுகாக்க சில குறிப்புகள் :
* ‘சன் ஸ்கிரீன்’ உடலில் போடாமல் வெயிலில் செல்லாதீர்கள்.
* கொதிக்கும் வெயிலில் ‘ஷாப்பிங்’ வேண்டாம். காலை அல்லது மாலை நேரத்தில் செல்லலாம்.
* சிறு பூச்சி கடி, உஷ்ணம் இவை உடனே சரும அரிப்பினை வெகு வாக்கி விடும். கவனம் தேவை. மருத்துவ ஆலோசனை முதலிலேயே பெறுங்கள்.
* தலை தொப்பி, கறுப்பு கண்ணாடி மிக அவசியம்.
* நீச்சல் செய்வது நல்லது. தகுந்த பாதுகாப்புகளுடன்.
* காரில் சூடு அதிகமாய் இருக்கும். குழந்தைகளை தனியே விட்டு கடைக்குச் செல்லாதீர்கள்.
* சுத்தமான தண்ணீர் குடிப்பதே முதல் முக்கிய பாதுகாப்பு.                       

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.