சற்றுமுன்

ராணுவக் கல்லூரியில் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் க்ளைமாக்ஸ்


நான்கைந்து வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த ‘விஸ்வரூபம்-2’ படத்துக்கு, ஒருவழியாக விடிவு காலம் பிறந்துவிட்டது. கமலே படத்தை வாங்கிவிட்டார். இன்னும் க்ளைமாக்ஸ் படம்பிடிக்கப்படாத நிலையில், அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. சென்னை புனித தோமையார் மலையில் உள்ள ராணுவப் பயிற்சிக் கல்லூரியில், 10 நாட்கள் க்ளைமாக்ஸ் காட்சியைப் படம்பிடிக்கப் போகிறார்கள். இதற்காக சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது. அத்துடன், சில ஸீன்களை செட் போட்டும் படமாக்க இருக்கிறார்களாம். விஜய் டி.வி.யின் ‘பிக் பாஸ்’ ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னர் படப்பிடிப்பை முடித்துவிட பிளான் செய்கிறார்கள். பிறகு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறும்போது, கமல் ‘பிக் பாஸ்’ ஷூட்டிங்கில் இருப்பார். அது முடிந்ததும், இந்த வருடத்திலேயே படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.

Summary: Climax of 'Vishwaroopam -2' in Military College .The 'Vishwaroopan 2' film, which has been dragging for four decades, has been delayed by the end of time. Kamale has taken the picture. While the climax is not yet filmed, the work is going on. They are going to shoot a 10-day climax scene at the Army Training College in St. Thomas Mount, Chennai.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.