‘சதுரங்க வேட்டை’ படத்தைத் தொடர்ந்து வினோத் இயக்கும் படம் ‘தீரன் அத்தியாயம் ஒன்று’. கார்த்தி ஹீரோவாகவும், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். 2005ஆம் ஆண்டு நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை ஒன்லைனாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த ஒரு செய்தியைக் கதையாக்குவதற்காக பல்வேறு இடங்களுக்கும் பயணித்து, பல போலீஸ் அதிகாரிகளிடம் பேசி, 600 பக்க டாக்குமெண்டாக ரெடி செய்திருக்கிறார் வினோத். அதை வைத்துத்தான் இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கிறார்.
டி.எஸ்.பி.யான கார்த்தி, ஒரு வழக்குக்காக இந்தியா முழுவதும் பயணிப்பதுதான் கதை. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வடஇந்தியாவில் எடுக்கப்பட்டுள்ளன. கொளுத்தும் வெயிலில் 45 நாட்கள் காய்ந்து திரும்பியிருக்கிறார் கார்த்தி.