சற்றுமுன்

கத்திச்சண்டை போட்ட விஜய்




அட்லீ இயக்கத்தில், இன்னும் தலைப்பு வைக்காத படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தில், அப்பா – இரண்டு மகன்கள் என விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்நிலையில், இந்தப் படத்தில் பாடல் எழுதியுள்ள விவேக், இந்தப் படத்தைப் பற்றி முக்கியமான ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, படப்பிடிப்பு தளத்துக்குச் சென்ற அவர், விஜய் கத்திச்சண்டை போடும் காட்சியைக் கண்டாராம். ஒரே டேக்கில் அந்தக் காட்சியை ஓகே செய்த விஜய்யைப் பார்த்து அவர் ஆச்சரியப்பட்டுப் போனாராம். அப்படியானால், அப்பா விஜய்க்குத்தான் அந்த கத்திச்சண்டை இருக்கும் என்று உறுதியாகக் கூறுகின்றனர் விஜய் ரசிகர்கள். காரணம், அப்பா விஜய்யின் போர்ஷன் கடந்த நூற்றாண்டில் நடைபெறுகிறது. கத்தியை வைத்து சண்டை போட்டால், அது கடந்த நூற்றாண்டாகத்தான் இருக்க வேண்டும் என்று அடித்துக் கூறுகின்றனர் ரசிகர்கள்.

Summary: Vijay is acting in the movie which is not yet titled. In this movie, everyone knows that Vijay has acted in three roles as father - two sons. In this scenario, Vivek, who wrote the song in this film, has released an important information about the film. That is, he went to the shooting site and Vijay saw a glimpse of the scene. He was surprised to see Vijay who made the show in the same tape The battle of papa Vijay is taking place in the last century. If you fight with a knife, it will be the last century.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.