சற்றுமுன்

மேட்டூர் அணையை முழுமையாக தூர்வார வாசன் கோரிக்கை

மேட்டூர் அணையை முழுமை யாக தூர்வார வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரி டெல்டா மாவட்டங் களில் உள்ள சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் மேட்டூர் அணை நீர் மூலம் பாசன வசதி பெறுகின்றன. மேட்டூர் அணை கட்டப்பட்டு ஏறத்தாழ 83 ஆண்டுகள் கடந்துவிட்டன. முறையாக தூர்வாரப்படாததால் அணை யின் ஆழம் 3-ல் 1 பங்கு குறைந்துவிட்டது. ...

இந்நிலையில், தற்போது தமிழக அரசு மேட்டூர் அணை தூர்வாரப் படும் என அறிவித்திருக்கிறது. நவீன தொழில் நுட்பத்துடன், தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட குழுவை அமைத்து மேட்டூர் அணையை தூர்வார வேண்டும். அவசர அவசரமாக பணியை ஆரம்பித்து குறுகிய காலத்துக்குள் முடித்துவிட வேண்டாம். 


அணையை முழுமையாக தூர்வார வேண்டும். தூர் வாரும் பணியின் போது அப்பகுதியில் சேதம் ஏற் படாமலும் தொழில்கள் பாதிக்கப்படாமலும் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும். 


மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறு, ஏரி, குளம் குட்டை போன்ற நீர் நிலைகளை கோடைகாலம் முடிவதற்குள் தூர்வாரி முடிக்க வேண்டும்
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


TMC leader GK Vasan has urged the Mettur Dam to be a complete drought.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.