சற்றுமுன்

ஜேம்ஸ் பாண்டாக நடித்த ’ரோஜர் மூர்’ காலமானார்..!

ஜேம்ஸ் பாண்ட் புகழ் நாயகன் ’ரோஜர் மூர்’ உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

கடந்த 1973ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை 7 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.


உலகெங்கும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அதில் ஒவ்வொரு காலக்கட்டங்களில் புதிது புதிதாக நாயகர்கள் உருவாகி, ரசிகர்கள் மனதில் இடம்பெறுவர். அவர்களில் முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் நாயகனாக இருந்த நடிகர் ரோஜர் மூர்(89). அவர் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் உடல்நிலை மோசமாகி சுவிட்சர்லாந்தில் இன்று காலமானார். இதுகுறித்து அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அதில் மூர் புற்றுநோய் வந்த பிறகு குறைந்த காலமே உயிரோடு இருந்தாலும், அந்நேரத்தில் அவர் மிகவும் தைரியமாக நோயை எதிர்கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அப்பா, நீங்கள் நீங்களாகவே இருந்தமைக்கு நன்றி. நீங்கள் பலருக்கு மிக முக்கியமானவராக இருந்துள்ளீர்கள் என்று அவரது பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

JamesBond actor Roger Moore  passes away in Switzerland after a brief battle with cancer. He was 89.


aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.