சற்றுமுன்

கால்நடைகள் அழியாமல் பாதுகாக்க வேண்டும்- பொன்னார்

செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாட்டிறைச்சியை ஒரு குறிப்பிட்ட மதத்தவர்களுக்கான உணவு என வகைப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

“மத்திய அரசின் இந்த முடிவு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குமே தவிர குறைக்காது. மாட்டிறைச்சி என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு சொந்தம் கிடையாது. மாட்டிறைச்சி சாப்பிடுவர்கள்தான், அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என முத்திரை குத்துவதும் தவறு. எல்லா மதங்களுமே மனிதர்கள் மட்டுமல்லாமல் அருகிலுள்ள உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என தெரிவிக்கின்றன.

நாம் பாரம்பரியமாக எருது, பசு, காளை ஆகியவற்றை கடவுளாக கருதி வழிபட்டு, பராமரித்து வந்தோம். ஆனால் இடைப்பட்ட காலத்தில்தான் அவற்றை விவசாயிகள் விற்பனை செய்யத் துவங்கினர். நம் கால்நடைகள் அழியாமல் பாதுகாக்க வேண்டும். எனவே இந்த புதிய சட்டத்தை அரசியலாக்காதீர்கள்.” என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Union Minister Ponnathirakrishnan, who met the reporters, said that the beef should not be accepted as a food for a particular religion.


aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.