சற்றுமுன்

ரெஜினா நல்ல இடத்துக்குப் போவார் - வம்சி கிருஷ்ணா

ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தில், ராஜமாதா சிவகாமியாக நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். இவருடைய கணவரான வம்சி கிருஷ்ணா, தெலுங்கில் பிரபல இயக்குநர். இவர் தற்போது ‘நட்சத்திரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில், சாய்தரண் தேஜ் மற்றும் ரெஜினா நடித்துள்ளனர். படப்பிடிப்பின்போது ரெஜினாவின் நடிப்பைக் கண்டு வியந்த வம்சி கிருஷ்ணா, ‘சின்ன வயதில் என் மனைவியைப் பார்த்தது போலவே இருக்கிறது. விரைவில் நல்ல இடத்துக்குப் போவார்’ என்று தெரிவித்துள்ளார். ரெஜினா நடிப்பில் வெளியான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘மாநகரம்’ என இரண்டு படங்களுமே வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல பெயரைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக அவர் நடித்த ‘சரவணன் இருக்க பயமேன்’ இன்று ரிலீஸாகிறது.

Ramya Krishnan acted as Rajamadha Sivakami. His husband, Vamsi Krishna, is a prominent director in Telugu.Vamsi Krishna, who watched Regina's performance, is like 'seeing my wife at a young age. He will soon go to good place, "he said.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.