சற்றுமுன்

அஜீத் பிறந்த நாளை கொண்டாடியவர்கள் கைது

தீபாவளி, பொங்கலைவிட, தனக்குப் பிடித்த நடிகனின் பிறந்த நாளைத்தான் ஒவ்வொரு ரசிகனும் வெகு விமர்சையாகக் கொண்டாடி வருகிறான். அதிலும், ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற பெரிய நடிகர்களின் பிறந்த நாள் என்றால், அவர்களுடைய ரசிகர்களுக்கு திருவிழா தான்.

மே 1ஆம் தேதி அஜீத்தின் பிறந்த நாளை அப்படித்தான் கொண்டாடினார்கள் அவருடைய ரசிகர்கள். மதுரையில் ஓரிடத்தில் இரவு நேரத்தில் அஜீத்தின் பாடல்களைச் சத்தமாக வைத்து ரசிகர்கள் ஆடிப் பாடியுள்ளனர். தன் தூக்கத்துக்கு இடைஞ்சலாக இருப்பதால், சத்தத்தைக் குறைத்து வைக்கும்படி ஒரு முதியவர் கூற, இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஆகியிருக்கிறது.

அந்த வாக்குவாதம் கைகலப்பில் முடிய, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதியவர் கொடுத்த புகாரின் பேரில் 5 அஜீத் ரசிகர்களைக் கைது செய்திருக்கிறது காவல் துறை.

Those arrested by Ajith's birthday were arrested. On May 1, Ajith's birthday was celebrated by his fans. At night in Madurai, fans have sung Ajith's songs loudly. Being hindered by her sleep, an elder has argued that both sides have a tendency to reduce the noise.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.