சற்றுமுன்

'குருஷேத்திரா'-வில் திரௌபதியாக நடிக்கும் நயன்தாரா?

பெங்களூரு: கன்னடத்தில் உருவாகவிருக்கும் 'குருஷேத்திரா' திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் நயன்தாரா, தற்போது தெலுங்கு, மலையாம் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கன்னட சினிமாவிலும் நடிக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

கன்னட திரையுலகில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் 'குருஷேத்திரா' திரைப்படத்தில் தர்ஷன் துரியோதனனாக நடிக்கிறார். கர்ணன் கதாப்பாத்திரத்தில் ரவிச்சந்திரன் நடிக்கிறார். நாகண்ணா இயக்கவிருக்கும் இப்படத்தில் நயன்தாரா திரெளபதியாக நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழு நினைப்பதாகவும், இது குறித்து நயனிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'சூப்பர்' என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

It is learnt from sources in the tinsel town that Nayanthara has been approached for an important role in Kurukshetra. While it is confirmed that Darshan will be playing Duryodhana and V Ravichandran will be seen as Krishna, the female lead in it may be Nayanthara.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.